டிரக்கோடு கடத்தப்பட்ட வெங்காயம்: ரூ.22 லட்சம் மதிப்பு என தகவல்

மகாராஷ்டிரா மாநிலத்தில் இருந்து உத்திரபிரதேச மாநிலத்திற்கு டிரக் ஒன்றில் ரூபாய் 22 லட்சம் மதிப்புள்ள வெங்காயம் சென்றுகொண்டிருந்தபோது திடீரென அந்த டிரக்கை வழி மறித்த மர்ம நபர்கள் அதிலிருந்த வெங்காயத்தை டிரக்கோடு கடத்தி சென்றது பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை விஷம் போல் ஏறி கொண்டிருப்பதை அடுத்து சாமானிய மனிதர்கள் வெங்காயத்தை வாங்குவதே பெரும் சிரமமாக உள்ளது. இந்த நிலையில் தங்கம் வைரம் நகைகள் போல் வெங்காய திருட்டும் தற்போது அதிகரித்து வருகிறது

நேற்று முன்தினம் மகாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள நாசிக் என்ற பகுதியில் இருந்து ரூ 22 லட்சம் மதிப்புள்ள வெங்காயத்தை ஒரு டிரக்கில் ஏற்றி உத்தரப்பிரதேச மாநிலத்தில் உள்ள கோரக்பூர் என்ற பகுதிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த ட்ரக் தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தபோது திடீரென வழிமறித்த ஒரு கும்பல் அந்த டிரக் டிரைவரை அடித்துப் போட்டுவிட்டு பிறகு வெங்காயத்தை டிரக்கோடு கடத்திக் கொண்டு சென்றுவிட்டனர்.

இதுகுறித்து ஷிவ்பூர் போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், காணாமல் போன டிரக்கை கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் ஈடுபட்டு வருவதாகவும் செய்திகள் வெளியாகி உள்ளது

சுமார் 40 டன் மதிப்புள்ள வெங்காயம் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருப்பது அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

Leave a Reply