shadow

download (1)

இந்திய பொதுத்துறை நிறுவனமான, எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு நிறுவனம் (ஓ.என்.ஜி.சி.,), எஸ்.சி., எஸ்.டி., மாணவர்களுக்கான உதவித்தொகை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

தகுதிகள்: 12ம் வகுப்பில் 60 சதவீதம் தேர்ச்சி பெற்று, அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் அல்லது கல்லூரியில் முழு நேரக் கல்வி முறையில், முதலாம் ஆண்டு எம்.பி.பி.எஸ்., இன்ஜினியரிங் அல்லது முதலாம் ஆண்டு முதுநிலை பாடப்பிரிவில் ஜியோலஜி, ஜியோபிசிக்ஸ் அல்லது எம்.பி.ஏ., பயின்று கொண்டிருக்க வேண்டும்.

பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூ. 4,50,000 லட்சத்துக்கு மிகாமல் இருத்தல் வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி நாள்: நவம்பர் 15

மேலும் தகவல்களுக்கு: www.ongcindia.com

Leave a Reply