மாதந்தோறும் ஆயிரம் ரூபாய்! இன்று முதல் விண்ணப்பிக்கலாம்!

6 முதல் 12ம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் படித்து மேல்படிப்பு படிக்கும் மாணவிகளுக்கு மாதம்தோறும் ரூ.1000 நிதியுதவி வழங்கப்படும்

இந்நிலையில், உயர்கல்விக்கான ஊக்கத்தொகை பெறும் மாணவிகளின் பட்டியலை பள்ளிக்கல்வித்துறை வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் மொத்தம் 2.70 லட்சம் மாணவிகள் மாதந்தோறும் ரூ.1,000 ஊக்கத்தொகை பெற தகுதி பெற்றுள்ளனர்.

தகுதி பெற்ற மாணவிகளின் விவரங்களை https://studentsrepo.tn, https://schools.gov.in  என்ற இணையதள முகவரியில் காணலாம் என்று பள்ளிக் கல்வித்துறை தெரிவித்துள்ளது.