தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா: அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல்

தமிழகத்தில் மூன்று பேருக்கு கொரோனா வைரஸ் அறிகுறி இருப்பதாக கூறப்பட்ட நிலையில் அவர்களில் ஒருவருக்கு மட்டுமே கொரோனா வைரஸ் நெகட்டிவ் ரிசல்ட் வந்ததாகவும் மற்ற இருவருக்கும் கொரோனா அறிகுறி இல்லை என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்

இதனை அடுத்து தமிழகத்தில் ஒரே ஒருவருக்கு மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதாக அவர் சற்று முன் அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்

மேலும் 700 பேருக்கு கொரோனா மாதிரி ரத்த பரிசோதனை நடத்தப்பட்டதாகவும் இதில் ஒருவரை தவிர மற்ற அனைவருக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் அவர் கூறியுள்ளார்

தமிழகத்தின் வெப்பநிலைக்கு கொரோனா வைரஸ் தாக்க அதிக வாய்ப்பில்லை என்பது ஒரு நிம்மதியான செய்தியாகும்

Leave a Reply