shadow

‘பைரவா’ படத்தில் மேலும் ஒரு பாடல். விஜய் ரசிகர்கள் உற்சாகம்

சமீபத்தில் இளையதளபதி விஜய் நடித்த ‘பைரவா’ படத்தின் பாடல்கள் வெளியாகி மிகப்பெரிய ஹிட்டாகியது என்பது அறிந்ததே. குறிப்பாக வர்லாம் வரலாம் வா பாடல் பட்டிதொட்டியெங்கும் ஒலித்து வருகின்றது.

இந்நிலையில் மேலும் ஒரு புதிய பாடல் இந்த படத்தில் இணைக்கப்பட்டுள்ளதாகவும், இந்த பாடலை பாடலாசிரியர் விவேக் இயக்கியுள்ளதாகவும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த தகவலை விவேக் தனது டுவிட்டரில் உறுதி செய்துள்ளார். இதுகுறித்து படக்குழுவினர் மிக விரைவில் அதிகாரபூர்வமாக அறிவிப்பார்கள் என்றும் அவர் கூறியுள்ளார்.

இதுவரை வெளிவராத இந்த பாடல் நேரடியாக திரையில் தோன்றும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Leave a Reply