என்.எல்.சி பாய்லர் விபத்தில் மேலும் ஒருவர் பலி!

உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது

நெய்வேலியில் உள்ள என்எல்சி 2வது அனல்மின் நிலையத்தில் கடந்த சில நாட்களுக்கு முன் பாய்லர் வெடித்து மிகப்பெரிய விபத்து ஏற்பட்டது

இந்த விபத்தில் 3 பேர் பலியாகினர். 8 பேர் படுகாயம் அடைந்து திருச்சி தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தனர்

இந்த நிலையில் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்று வந்த ஒப்பந்த தொழிலாளர் பாலமுருகன் என்பவர் சிகிச்சை பலனின்றி சற்றுமுன் உயிரிழந்தார். இதனையடுத்து தற்போது உயிரிழப்பு 4ஆக உயர்ந்துள்ளது.

என்.எல்.சி விபத்தில் மேலும் ஒருவர் பலியாகியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.