நேற்று முன் தினம் சனிக்கிழமை அதிகாலை மலேசிய விமானம் ஒன்று சீனா செல்லும் வழியில் திடீரென மாயமானது. இந்த விமானத்தில் சென்னையை சேர்ந்த ஒரு பெண் பயணம் செய்ததாகவும், அவருடைய கதி என்னவென்று தெரியாத நிலையில் இந்த விமானத்தில் இன்னொரு தமிழரும் பயணம் செய்துள்ளார் என்ற தகவல் தற்போது கிடைத்துள்ளது.
பாண்டிச்சேரி தொகுதியில் இருந்து கடந்த 1971ஆம் ஆண்டு எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்ட பிரபல அரசியல்வாதி மோகன் குமாரமங்கலம் அவர்களின் பேரன் முகேஷ் முகர்ஜி இந்த விமானத்தில் பயணம் செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இவர் தற்போது கனடாவில் வாழ்ந்து வந்துள்ளார். 42 வயதாகும் இவர் சீனாவிற்கு தனது மனைவி Xiaomo Bai, அவர்களுடன் இந்த விமானத்தில் பயணம் செய்தார் என்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. சீனாவிற்கு தனது மனைவியுடன் தொழில்முறை பயணமாக செல்லும் வழியில் விமானம் மாயமாகியுள்ளது.
தமிழகத்தில் உள்ள இவரது உறவினர்கள் இவரது நிலை குறித்து பெரும் கவலை தெரிவித்துள்ளனர்.
Leave a Reply
You must be logged in to post a comment.