ஒரு லிட்டர் குடிநீர் ஒரு ரூபாய் மட்டுமே: மகளிர் சுய உதவிக்குழு அசத்தல்

ஒரு லிட்டர் தண்ணீர் 20 ரூபாயிலிருந்து 30 ரூபாய் வரை விற்பனை செய்து கொண்டிருக்கும் நிலையில் கோவையைச் சேர்ந்த மகளிர் சுய உதவி குழு ஒரு ரூபாய்க்கு ஒரு லிட்டர் குடிதண்ணீர் விற்பனை செய்து அசத்தி வருகிறது

ஒரே ஒரு ரூபாய் மட்டும் கொடுத்தால் ஒரு லிட்டர் தண்ணீர் கிடைக்கும் என்றும் 7 ரூபாய் செலுத்தினால் 20 லிட்டர் கேனை நிரப்பிக் கொள்ளலாம் என்றும் மகளிர் சுய உதவிக் குழுவினர் அறிவித்துள்ளனர்

தற்போது வெயில் காலம் தொடங்கி விட்டதை அடுத்து தண்ணீர் தேவை அதிகமாக இருக்கும் என்பதால் மக்கள் குறைந்த விலையில் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம் என்று மகளிர் சுய உதவிக் குழுவினர் தெரிவித்துள்ளனர்

தனியார் கேன் குடிநீர் விற்பனையாளர்கள் 20 லிட்டர் குடிநீர் கேன் 35 முதல் 40 ரூபாய் வரை விற்பனை செய்துவரும் நிலையில் வெறும் ஏழு ரூபாய்க்கு மகளிர் சுய உதவி குழுக்களிடம் குடிநீர் வாங்க கூட்டம் அலைமோதி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *