shadow

ஒரு கிலோ ரூ.5000: விண்ணைத்தாண்டிய மல்லிகை பூ விலை

திண்டுக்கல்லில் ஒரு கிலோ ரூபாய் 5000 என மல்லிகை பூ விற்பனை ஆகி வருவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

கடும் பனிப்பொழிவு காரணமாக மல்லிகை பூ வரத்து குறைந்துள்ளதால் விலை கடந்த சில நாட்களாக விண்ணை தொட்டு வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது

கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் ஒரு கிலோ மல்லிகை பூ இரண்டாயிரம் என விற்பனையாகிக் கொண்டிருந்த நிலையில் இன்று திண்டுக்கல் மார்க்கெட்டில் ஒரு கிலோ மல்லிகை பூ 5 ஆயிரம் என விற்பனையாவது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது

மல்லிகைப்பூ விலை அதிகமாக விற்பனையாவது விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்