2007 முதல் ஒரு பெண் மற்றும் அவரது பெற்றோரை காங்கிரஸ் பொதுச் செயலர் ராகுல் காந்தி பிடித்து வைத்திருந்தார் என்று அலகாபாத் நீதிமன்றத்தில் மனு செய்யப்பட்டது பரபரப்பாகியுள்ளது.

இதனையடுத்து அலகாபாத் நீதிமன்றத்தின் லக்னோ கிளை விளக்கம் கேட்டு ராகுல் காந்திக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

சுகன்யா தேவி, இவரது தந்தை பல்ராம் சிங், தாயார் சுமித்ரா தேவி ஆகியோர் சார்பாக சமாஜ்வாடி கட்சி முன்னாள் எம்.எல்.ஏ கிஷோர் சமிர்த் என்பவர் மனு செய்திருந்தார்.

ஜனவரி 4, 2007 முதல் ராகுல் காந்தி இவர்களை சட்டவிரோதமாக பிடித்து வைத்திருந்ததாக அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.

மேலும் அந்தப் பெண்ணையும் அவரது பெற்றோரையும் கோர்ட்டின் முன் கொண்டுவரவும் அவர்களை விடுவிக்கவும் வழிவகைகளைச் செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது.

Leave a Reply