17தமிழக முதல்வர் ஜெயலலிதா இன்று சிதம்பரம் தொகுதியில் பிரச்சாரம் செய்வதற்காக ஹெலிகாப்டரில் வந்தார். அவரை பார்ப்பதற்காக முண்டியடித்து பெருங்கூட்டம் ஒரே நேரத்தில் முண்டியடித்ததால் பெரும் நெரிசல் ஏற்பட்டது. இந்த நெரிசலில் சிக்கி அதிமுக தொண்டர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

நெரிசலை சிக்கியவர்களை மீட்க நடவடிக்கை எடுத்த பெண் போலீஸ் ஒருவரும் படுகாயம் அடைந்தார். படுகாயம் அடைந்த பெண் போலீஸ் பெயர் மல்லிகா என்றும், அவர் மருத்துவமனையில் தற்போது சிகிச்சை பெற்று வருகிறார் என்றும் போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது.

நெரிசலில் சிக்கி உயிரிழந்த அதிமுக தொண்டர் பெயர் நந்தன் என்றும் அவர் அரியலூர் மாவட்டாம் டி.பளூர் என்ற பகுதியை சேர்ந்தவர் என்றும் விசாரணையில் தெரிய வந்துள்ளது. பாதுகாப்பு பணிக்காக நூற்றுக்கணக்கான போலீஸார் இருந்தும் இதுபோன்ற உயிரிழப்பு சம்பவங்கள் நடந்ததால் பொதுமக்கள் இடையே பெரும் அதிர்ச்சி நிலவுகிறது.

Leave a Reply