shadow

ஒரு நாள் பாஸ் ரூ.100: அதிர்ச்சி மேல் அதிர்ச்சி கொடுக்கும் போக்குவரத்து துறை

தமிழக அரசின் போக்குவரத்து துறை கடந்த 20ஆம் தேதி சுமார் 50% கட்டண உயர்வை அறிவித்து பொதுமக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ள நிலையில் தற்போது நாள் முழுவதும் பயணம் செய்யும் ஒரு நாள் பாஸ் கட்டணத்தை ரூ.50ல் இருந்து ரூ.100ஆக உயர்த்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் பேருந்து பிரயாணிகள் அதிர்ச்சியின் உச்சத்திற்கே சென்றுள்ளனர்

அதேபோல் மாதம் முழுவதும் விருப்பம் போல் பயணம் செய்யும் பாஸ் தற்போது ரூ.1000க்கு வழங்கப்பட்டு வருகிறது. இந்த பாஸ் விலை ரூ.2000ஆக உயரும் என்று கூறப்படுகிறது.

இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும், புதிய கட்டணங்களுடன் கூடிய ஒருநாள், மாத பாஸ் விரைவில் வெளிவரும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply