shadow

ஜெயலலிதாவின் போயஸ் இல்லத்தில் என்ன நடக்கின்றது? திடீரென குவிக்கப்பட்ட போலீஸ்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் போயஸ் கார்டன் இல்லத்திற்கு இன்று காலை திடீரென மாவட்ட ஆட்சியர், வருவாய் துறை அதிகாரிகள் வருகை தந்ததால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா இல்லத்தில் மீண்டும் சோதனை நடக்கவுள்ளதாக வதந்திகள் பரவியது. ஆனால் இது வருமானவரி சோதனை அல்ல என்றும், போயஸ் தோட்டத்தில் உள்ள வேதா இல்லத்தை ஜெயலலிதாவின் நினைவிடமாக மாற்ற அதிகாரிகள் ஆய்வு செய்து வருவதாக கூறப்படுகிறது. மேலும் அதிகாரிகளின் வருகையை முன்னிட்டு போயஸ் இல்லத்தில் ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

ஏற்கனவே ஜெயலலிதாவின் போயஸ் இல்லம் நினைவிடமாக மாற்றப்படும் என்று முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தெரிவித்திருந்தார். ஜெயலலிதா மறைவிற்கு பின்னரும், சசிகலா சிறைக்கு சென்ற பின்னரும் இந்த இல்லத்தில் விவேக் உள்ளிட்டோர் இருந்து வருவதாக கூறப்படும் நிலையில் இந்த ஆய்வால் ஏதாவது பிரச்சனை வராமல் இருக்கவே போலீஸ் குவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.