ஒமைக்ரான் மதிப்பு உயர்ந்ததால் மகிழ்ச்சி அடைந்த தொழிலதிபர்கள்!

உலகம் முழுவதும் ஒமிக்ரான் என்ற வைரஸ் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் ஒமிக்ரான் என்ற பெயருடைய கிரிப்டோகரன்சி 900 சதவீதம் மதிப்பு உயர்ந்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு சமீபத்தில் புதிய உருமாறிய கொரோனா வைரஸ்க்கு ஒமிக்ரான் என பெயர் வைத்தது. இந்த நிலையில் ஒமிக்ரான் என்ற பெயரைக் கொண்ட கிரிப்டோகரன்சியின் மதிப்பு இன்றைய நிலவரப்படி மதிப்பு 900 சதவிகிதம் உயர்ந்துள்ளது.

எனவே இந்த ஒமிக்ரான் கரன்ஸியில் முதலீடு செய்த தொழிலதிபர்கள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்