ஐரோப்பிய யூனியன் பிரதிநிதிகள் குழு இந்தியாவிற்கு வந்துள்ளது. அந்த குழுவினர் தற்போதைய காஷ்மீர் மாநிலத்தின் நிலைமை குறித்து அம்மாநில முதல்வர் உமரிடம் பேசினார்கள். அப்போது அவர்களிடையே உமர் அப்துல்லா பேசியதாவது:

கடந்த 1947ம் ஆண்டு இந்தியா சுதந்திரம் பெற்றது. அப்போது எல்லா மாநிலங்களும் ஒன்று சேர சம்மதம் தெரிவித்தன. அதன்படி, இந்தியாவுடன் இணைந்தன. இந்தியாவுடன் சேர ஜம்மு பிராந்தியம் சம்மதம் தெரிவித்தது, ஆனால் சேரவில்லை. இந்தியாவுடன் நாங்கள் சேரவில்லை என்ற எங்கள் கட்சியின் நிலை இன்னும் நீடிக்கிறது. இதனால்தான், காஷ்மீருக்கு இந்திய அரசு சிறப்பு அந்தஸ்து வழங்கியுள்ளது. எங்கள் பகுதிக்கு என்று தனி கொடி, தனி சட்டம் உள்ளது.

காஷ்மீர் பிரச்சனையில் பல்வேறு மாறுபட்ட கருத்துகள் உள்ளன. அவை பிரிவினை வாதத்துடன் தொடர்பு படுத்தப்பட்டுள்ளது. தீவிரவாதம் கொண்டவர்கள் பிரிக்க சொல்கிறார்கள். பிறர் இந்தியாவுடன் இணைக்க வேண்டும் என்கிறார்கள். இந்த இருதரப்பினரும் பேசாவிட்டால் இந்த நிலைமை மாறாது. பிரிவினைவாதிகளுடன் பேச்சு வார்த்தை நடத்த சட்டத்தில் இடம் உள்ளது. இவ்வாறு உமர் அப்துல்லா பேசினார். காஷ்மீர் மாநிலம் இந்தியாவின் ஒரு அங்கமாக உள்ளது. இதுபோன்ற நிலையில், உமர் அப்துல்லாவின் இந்த பேச்சு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது.

Leave a Reply