மாநில அரசு அதிரடி உத்தரவு!

ஏப்ரல் 30ஆம் தேதி வரை ஊரடங்கை ஒடிசா மாநிலம் நீட்டித்து உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் * ரயில் மற்றும் விமானங்களை இயக்க வேண்டாம் என மத்திய அரசுக்கு கோரிக்கையையும் ஒடிசா மாநிலம் முன்வைத்துள்ளது. இதனையடுத்து இந்தியாவில் ஊரடங்கை நீட்டித்த முதல் மாநிலம் ஒடிசா என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் ஜூன் 17ஆம் தேதி வரை ஒடிசாவில் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் விடுமுறை என ஒடிசா முதல்வர் நவீன் பட்நாயக் அறிவித்துள்ளார்.

முன்னதாக மத்திய அரசு அறிவித்த 21 நாட்கள் ஊரடங்கு உத்தரவு வரும் 14ஆம் தேதியுடன் முடிவுக்கு வரவுள்ள நிலையில் ஊரடஙகை நீட்டிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு வலியுறுத்திய 12 மாநிலங்களில் ஒடிசாவும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் மத்திய அரசு ஊரடங்கை நீட்டிக்கும் அறிவிப்பை வெளியிடுவதற்கு முன்னரே ஒடிசா மாநிலம் ஏப்ரல் 30 வரை ஊரடங்கை நீட்டித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் வரும் 11ஆம் தேதி பிரதமர் மோடி தலைமையில் அனைத்து மாநில முதல்வர்களும் காணொளி மூலம் ஊரடங்கை நாடு முழுவதும் நீட்டிப்பது குறித்து ஆலோசனை செய்யவுள்ளனர். இந்த ஆலோசனைக்கு பின் பிரதமர் மோடி ஊரடங்கு உத்தரவை நீட்டிப்பது குறித்த அறிவிப்பை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Leave a Reply