இந்தியா- நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக நேப்பியர் நகரில் நேற்று நடந்த முதல் ஒருநாள் போட்டியில் இந்தியா போராடி தோல்வி அடைந்தது.

டாஸ் வென்று முதல் பந்துவிச்சை தேர்வு செய்தார் இந்திய அணி கேப்டன் தோனி. முதலில் களம் இறங்கிய நியூசிலாந்து அணி 50 ஓவர்களில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 292 ரன்கள் எடுத்தது. ஜடேஜா வீசிய 45 வது ஓவரில் நியூசிலாந்து வீரர்கள் 20 ரன்கள் எடுத்தனர். இந்திய அணியின் பந்துவிச்சாளர் முகம்மது சமி 4 முக்கிய விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

293 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் களமிறங்கிய இந்திய அணிக்கு ஆரம்பமே அதிர்ச்சியளித்தது. தொடக்க ஆட்டக்காரர் ரோஹித் சர்மா 3 ரன்களில் ஆட்டமிழந்தார். இருப்பினும் நிதானமான ஆட்டத்தை வெளிப்படுத்திய விராத் கோஹ்லி சதம் அடித்தார். கேப்டன் தோனி 40 ரன்களில் அவுட் ஆனார். கடைசியில் இந்திய அணி 48.4 ஓவர்களில் 268 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுக்களையும் இழந்து தோல்வியடைந்தது.

ஆட்டநாயகனாக ஆண்டர்சன் தேர்வு செய்யப்பட்டார். இரு அணிகளுக்கிடயேயான அடுத்த போட்டி வரும் 22 ஆம் தேதி ஹாமில்டனில் நடைபெறுகிறது. இந்த வெற்றியின் மூலம் நியூசிலாந்து 1-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது.

Leave a Reply