shadow

வடகொரியா நிபந்தனையை ஏற்க ஒபாமா மறுப்பு
201512040548392330_Firing-on-aid-workers-in-the-United-States-Obama-condemned_SECVPF
உலகையே அணுகுண்டு சோதனைகள் மூலம் அச்சுறுத்தி வரும் வடகொரியாவுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் அமெரிக்காவும் தென்கொரியாவும் இணைந்து போர் ஒத்திகை நடத்தி வருகிறது. இந்த ஒத்திகையில் 10,000க்கும் மேற்பட்ட வீரர்களுடன், அதிநவீன போர்விமானங்களும் பங்கு பெற்றுள்ளன.

இதனால் வடகொரியா தற்போது கொஞ்சம் இறங்கி வந்து போர் ஒத்திகையை நிறுத்தினால் அணு ஆயுத சோதனைகளை கைவிட தயார் என்றும் கூறியுள்ளது. ஆனால் வடகொரியாவின் இந்த நிபந்தனையை ஏற்க ஒபாமா மறுத்துவிட்டார். ஒபாமா இதுகுறித்து கூறியபோது, “வடகொரியாவின் யோசனையை அமெரிக்கா, தீவிரமாக எடுத்துக்கொள்ளவில்லை என்றும், அணு ஆயுதங்கள் தயாரிப்பதில்லை என்று வடகொரியா உறுதியாக கூறினால் மட்டுமே போர் ஒத்திகையை நிறுத்துவது குறித்து பரிசீலனை செய்யப்படும் என்றும் அவர் கூறினார்.

மேலும்வட கொரிய தீபகற்பத்தில் அணு ஆயுத போரை தடுக்க வடகொரியா உண்மையிலேயே கருதினால் அந்நாடு ஏவுகணை சோதனைகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply