டெல்லி பயணம் செய்கிறார் ஓ.பன்னீர்செல்வம்!!

ஒற்றைத் தலைமை கருத்துக்கு ஓ . பன்னீர் செல்வம் தரப்பு தீவிரமாக எதிர்ப்பு தெரிவித்து வந்தார்

அதிமுக பொதுக்குழு கூட்டம் திட்டமிட்டபடி நேற்று நடைபெற்றது. அதில் ஏற்கெனவே திட்டமிட்டபடி தீர்மானங்கள் நிறைவேற்றப்படவில்லை.

இந்தநிலையில், ஓ.பன்னீர் செல்வம் டெல்லி சென்றுள்ளார். அங்கு தலைமைத் தேர்தல் ஆணையரை சந்திக்க முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.