கடந்த இரண்டு தினங்களாக இணையத்தில் ஒரு அதிர்ச்சி வீடியோ ஒன்று வெளியாகி உலகையே கலக்கிக்கொண்டு இருக்கின்றது.
மருத்துவமனையில் பணிபுரியும் நர்ஸ் ஒருவர், சுயநினைவு இல்லாத ஒரு நோயாளியை சக்கர நாற்காலியில் கொண்டு செல்கிறார். ஒரு குறிப்பிட்ட இடத்திற்கு வந்தபிறகு அந்த நோயாளியை சக்கர நாற்காலியோடு சேர்த்து சுவரில் மோத வைக்கிறார். நோயாளி சுயநினைவில் இல்லாததால் அவருக்கு ஒன்றும் தெரியவில்லை. பின்னர் மீண்டும் மீண்டும் அந்த நோயாளியை சுவரில் மோத வைத்து சிறிது நேரம் அந்த நர்ஸ் விளையாடுகிறார். அதன் பின்னர் நோயாளியின் அறைக்கு அழைத்து செல்கிறார்.
சுயநினைவு இல்லாத நோயாளியை நர்ஸ், சுவற்றில் மோதிய காட்சி அங்குள்ள ரகசிய வீடியோ காமிரா ஒன்றில் பதிவாகியுள்ளது. இந்த வீடியோவை தற்போது அந்த மருத்துவமனையில் உள்ள ஒருவர் இணையத்தில் பதிவு செய்ததால் இணையத்தில் இந்த வீடியோவை பலர் பார்த்து நர்ஸுக்கு கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். புனிதமான நர்ஸ் தொழிலில் இப்படி ஒரு கொடூர எண்ணம் கொண்ட நர்ஸ் இருப்பது ஆபத்தானது என பலர் கருத்து தெரிவித்துள்ளனர்.
இந்த சம்பவம் நடந்த எந்த நாட்டில், எந்த மருத்துவமனையில் நடந்தது என்பது குறித்த தகவல் இதுவரை வெளியாகவில்லை.
[embedplusvideo height=”300″ width=”500″ editlink=”//bit.ly/1ggEdwP” standard=”//www.youtube.com/v/PrpUunhxE9o?fs=1″ vars=”ytid=PrpUunhxE9o&width=500&height=300&start=&stop=&rs=w&hd=0&autoplay=0&react=1&chapters=¬es=” id=”ep2418″ /]
Leave a Reply
You must be logged in to post a comment.