தேசிய திறனாய்வு தேர்வு (NTSE) தள்ளிவைப்பு: புதிய தேர்வு தேதி அறிவிப்பு

NTSE என்று கூறப்படும் தேசிய திறனாய்வு தேர்வு ஜனவரி 29-ஆம் தேதி நடக்க இருந்த நிலையில் இந்த தேர்வு ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

ஜனவரி 29ஆம் தேதி நடைபெற இருந்த தேசிய திறனாய்வு தேர்வு கொரோன்பா வைரஸ் பாதிப்பு காரணமாக பிப்ரவரி 5ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த தேர்வுக்கான நுழைவுச்சீட்டு ஜனவரி 25 முதல் ஆன்லைனில் டவுன்லோடு செய்துகொள்ளலாம்

இந்த தேர்வில் வெற்றி பெற்றால் 11 மற்றும் 12ம் வகுப்புகள் உள்பட முதுநிலை படிப்பு வரை உதவித்தொகை வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.