shadow

தேசிய பங்குச் சந்தையில் முறைகேடு செய்ததாக குற்றம் சாட்டப்பட்டு இருந்த சித்ரா ராமகிருஷ்ணா இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.

தேசிய பங்குச் சந்தையின் முன்னாள் தலைமை அதிகாரி சித்ரா ராமகிருஷ்ணா கடந்த 2013 முதல் 2016 ஆம் ஆண்டு வரை தேசிய பங்குச் சந்தையின் தலைமை நிர்வாக அதிகாரியாக பதவியில் இருந்தார். தனது பதவிக்காலத்தில் அவர் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டதாக கூறப்பட்டது.

இதனையடுத்து சித்ரா ராமகிருஷ்ணன் உள்பட 3 பேர் மீது சிபிஐ வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வந்தது.

இந்த நிலையில் சித்ரா ராமகிருஷ்ணன் தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதை அடுத்து நேற்றிரவு சித்ரா ராமகிருஷ்ணனை சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர்.