shadow

டெல்லியில் இருந்தபடியே கேரளாவை ரசிக்க உதவும் வெர்சுவல் ரியலிட்டி

keralaவெர்சுவல் ரியலிட்டி என்பது 360 டிகிரி கோணத்தில் உருவாக்கப்படும் ஒரு திரைப்படம். இந்த திரைப்படத்தை பார்த்தால் அந்த படத்தில் உள்ள இடத்தில் நாம் இருப்பது போன்ற உணர்வு ஏற்படும். அந்த அளவுக்கு தத்ரூபமாக இந்த டெக்னாலஜி அமைந்துள்ளது.

இந்நிலையில் டெல்லியில் உள்ள விமான நிலையத்தில் கேரள சுற்றுலாத்துறை சார்பில் வெர்சுவல் ரியலிட்டி திரைப்படம் ஒளிபரப்பாகின்றது. இந்த படத்தில் 2000 கி.மீ தொலைவில் உள்ள கேரளாவின் அழகை பார்த்து ரசிக்கலாம். இதற்காக 2 நிமிட குறும்படம் ஒன்று தயாரிக்கப்பட்டுள்ளது. இதில் கேரளாவின் பாரம்பரிய படகான கெட்டுவெல்லத்தில் பயணிப்பது போன்ற அனுபவத்தை பெறலாம்.

டெல்லி விமான நிலையத்திற்கு வருபவர்கள், விமானங்களுக்காக காத்திருக்க நேரிட்டால், அவர்கள் அங்குள்ள கேரள இல்லத்திற்கு சென்று பொழுதை கழிக்கலாம். இதன்மூலம் டெல்லியில் இருந்து கொண்டே கேரளாவை ரசிக்கும் அனுபவத்தை பெறலாம். இதுபோன்ற வசதி மும்பை, பெங்களூரு விமான நிலையங்களிலும் ஏற்படுத்தப்பட உள்ளது.

Leave a Reply