ஜாதிச்சான்றிதழ் பெற புதிய எளிய முறை. மத்திய அரசு அறிவிப்பு

ஜாதிச்சான்றிதழ் பெற புதிய எளிய முறை. மத்திய அரசு அறிவிப்பு

certificate600பள்ளி மாணவர்கள் தங்களுடைய ஜாதி சான்றிதழ்களை பெறுவதற்காக அரசு அலுவலகங்களுக்கு சென்று அலைக்கழிக்கப்படுவதோடு அவர்களுடைய காலமும் நேரமும் வீணாகிறது. இதனால் இனிமேல் பள்ளி மாணவர்களுக்கு அவர்கள் படிக்கும் பள்ளியிலேயே ஜாதிச்சான்றிதழ் வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இந்த அறிவிப்பு அரசு அதிகாரிகளுக்கு அதிர்ச்சியையும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

மத்திய அரசு தற்து அனைத்து மாநில மற்றும் யூனியன் பிரதேச அரசுகளுக்கு முக்கிய அறிவிப்பு ஒன்றை அனுப்பியுள்ளது. இந்த அறிவிப்பில், ” இனிமேல் பள்ளியின் முதல்வர் அல்லது தலைமை ஆசிரியர் சம்பந்தப்பட்ட மாணவர்களிடமிருந்து சான்றிதழுக்கு தேவையான ஆவணங்களை பெற்று, அவற்றை சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்து வேண்டிய சான்றிதழ்களை கோர வேண்டும். சம்பந்தப்பட்ட அரசு அதிகாரிகளும் அந்த ஆவணங்களை ஆய்வு செய்து, உரிய சான்றிதழ்களை 30 முதல் 60 நாட்களுக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் ஜாதிச்சான்றிதழ் பெற மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் அலைக்கழிக்கப்படுவது தவிர்க்கப்படும்

ஜாதிச் சான்றிதழை பெறுவதில் தாமதம் ஏற்படுவதால் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியின மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப் கிடைப்பதிலும் தாமதம் ஆவதாக ஏகப்பட்ட புகார்கள் வந்ததை அடுத்து மத்திய அரசு இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply