shadow

ஒரு முதல்வர், இரண்டு துணை முதல்வர்கள்: உ.பியில் பாஜகவின் அக்னிப்ப்ரிட்சை

உத்தரபிரதேச மாநிலத்தில் சமீபத்தில் நடந்த சட்டமன்ற தேர்தலில் வரலாறு காணாத வெற்றி பெற்ற பாரதிய ஜனதா, ஆட்சியமைப்பதிலும் இதுவரை இல்லாத அளவில் புதுமையுடன் ஆட்சி அமைக்கின்றது. அதாவது அந்த மாநிலத்தில் ஒரு முதல்வர் மற்றும் இரண்டு துணை முதல்வர்கள் என முதன்முதலாக அக்னிப்பரிட்சை நடத்துகிறது.

உத்தரபிரதேச மாநிலத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் தேர்வு செய்யப்பட்டுள்ள நிலையில் அவருக்கு துணை முதல்வராக கேஷவ் பிரசாத் மவுரியா, தினேஷ் சர்மா ஆகியோர் பதவியேற்கவுளதாக கூறப்படுகிறது. ஆட்சியும் கட்சியும் ஒரே நபரிடம் இருந்து அவர் அதிகாரம் மிக்கவராக மாறிவிடக்கூடாது என்பதற்காகவே பாஜக தலைமை இவ்வாறு இரண்டு துணை முதல்வர்களை நியமனம் செய்திருப்பதாக கூறப்படுகிறது.

உத்தரபிரதேச மாநில மக்கள் இதை எந்த அளவுக்கு ஏற்றுக்கொள்வார்கள் என்பதை போகப்போகத்தான் பார்க்க வேண்டும். மேலும் ஒரு பெரிய மாநிலத்தில் மூன்று முதல்வர்கள் ஒருமித்த கருத்தோடு எப்படி ஐந்து ஆண்டுகள் ஆட்சி நடத்துவார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Leave a Reply