மே 28ம் தேதி இந்த தடை நீடிக்கும்

காவல்துறை அதிரடி அறிவிப்பு

கொரோனா வைரஸ் காரணமாக ஏற்கனவே மூன்றாம் கட்ட ஊரடங்கு உத்தரவு தற்போது அமலில் இருக்கும் நிலையில் ஒருசில தளர்வுகள் அமலுக்கு வந்தாலும் முக்கிய தடைகள் இன்னும் இருந்து வருகிறது. அவற்றில் ஒன்றுதான் போராட்டம் நடத்த தடை என்பது.

சென்னை காவல் எல்லைக்குட்பட்ட பொது இடங்களில் போராட்டம் நடத்த ஏற்கனவே தடை இருந்து வரும் நிலையில் தற்போது அந்த தடை மேலும் 15 நாட்களுக்கு நீடிக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது

சென்னை காவல் எல்லைக்கு உட்பட்ட பொது இடங்களில் பேரணி, உண்ணாவிரதம், மனிதச் சங்கிலி போன்றவற்றையும் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளது

வருகிற 28ம் தேதி வரை 15 நாட்களுக்கு இந்த தடை நீடிக்கும் என காவல்துறை அறிவித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply