shadow

ஒலிம்பிக்கில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு தண்டனை. வடகொரிய அதிபர் அதிரடி

1ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு அந்தந்த நாடுகளின் அரசு கெளரவித்து வரும் நிலையில் பதக்கம் வெல்லாத வீரர்களுக்கு வடகொரியா தண்டனை கொடுக்க முடிவு செய்தூள்ளது.

ர்ரியோ ஒலிம்பிக் போட்டியில் தென் கொரியா 9 தங்கப்பதக்கம், 3 வெள்ளிப்பதக்கம், 9 வெண்கலப்பதக்கம் என 21 பதக்கங்களை குவித்தது. ஆனால் அதன் அண்டை நாடான வடகொரியா 2 தங்கம், 3 வெள்ளி, 2 வெண்கலம் என 7 பதக்கங்கள் மட்டுமே பெற்றுள்ளதால் வடகொரியா அரசு ஆத்திரமடைந்துள்ளது.

ஒலிம்பிக் போட்டிக்கு குழுவினரை அனுப்பி வைத்தபோது, கண்டிப்பாக குறைந்தபட்சம் 17 பதக்கங்களையாவது வென்று வர வேண்டும் என்று வடகொரிய வீரர்களிடம் அந்த நாட்டின் தலைவர் கிம் ஜாங் அன் கட்டளை இட்டிருந்ததாகவும் ஆனால் 7 பதக்கங்களை மட்டுமே வடகொரிய வீரர்களால் வென்றுள்ளதால் கடும் அதிருப்தி அடைந்ட கிம் ஜாங் அன் பதக்கம் வெல்லாத வீரர்களை தண்டிக்கும் விதமாக, அவர்களை நிலக்கரி சுரங்கங்களில் கூலித்தொழிலாளியாக வேலைக்கு அமர்த்த அவர் முடிவு செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இதுபற்றி வடகொரிய வல்லுனர் டோஷிமிட்சு ஷிகேமுரா கூறியபோது, ‘ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வென்ற வீரர்களுக்கு வீடு, கார் மற்றும் பிற பரிசுகள் வழங்கப்படும். அதே நேரத்தில் பதக்கம் வெல்லாதவர்கள் மீது கோபம் கொண்டுள்ள கிம் ஜாங் அன், அவர்களை வசதிகள் குறைவான வீடுகளுக்கு இட மாற்றம் செய்வதுடன், அவர்களுக்கு வழங்கப்படுகிற சலுகைகளை குறைத்துக்கொள்ளவும் முடிவு செய்துள்ளார்’ என குறிப்பிட்டார்.

Leave a Reply