shadow

வடகொரிய அதிபரின் முதன்மை உதவியாளர் திடீர் மரணம். சதிவேலையா?
north korea
அமெரிக்காவுக்கு மட்டுமின்றி பல அண்டை நாடுகளுக்கு அச்சுறுத்தலாக இருந்து வரும் வடகொரிய அதிபரின் முதன்மை உதவியாளர் திடீரென் கார் விபத்தில் பலியாகியுள்ளார். அதிபருக்கு வலது கை போன்று இருந்த இவருடைய மரணம் உண்மையான விபத்தா? அல்லது சதிவேலை காரணமா? என விசாரணை நடந்து வருகிறது.

வட கொரிய அதிபரான கிம் ஜாங் உன்னி அவர்களுக்கு நெருக்கமானவரும் “புரட்சிகரமான தோழர்”  என்று அழைக்கப்படுபவருமான அவரது முதன்மை உதவியாளர் கிம் யாங் கான் கார் விபத்து ஒன்றில் பலியாகியுள்ளார். இந்த தகவலை அந்நாட்டு செய்தி நிறுவனம் உறுதிப்படுத்தியுள்ளது

நீண்ட காலமாக சண்டையிட்டு வரும் வட மற்றும் தென் கொரியா நாடுகளுக்கிடையே இருந்து வந்த பகையை நீக்கி இருநாடுகளுக்கும் இடையே மத்தியஸ்தம் செய்வதில் முக்கிய பங்கு வகித்த இவர் பல்வேறு பேச்சுவார்ததைகளில் பங்கெடுத்து அரசுக்கு தேவையானவற்றை சாதித்தும் கொடுத்துள்ளார்.

தொழிலாளர் கட்சியின் செயலாளரும் அதன் ஐக்கிய முன்னணி துறையின் தலைவராகவும் இருந்த இவரது மறைவு அதிபர் கிம் ஜாங் உன்னுக்கு பெரும் பின்னடைவாக இருக்கும் என்று அரசியல் வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

Chennai Today News: North Korea leader Kim Jong-un’s ‘closest comrade’ dies in car crash

Leave a Reply