shadow

அணு ஆயுத போர் மூண்டால் அதற்கு அமெரிக்காவே பொருப்பு. வடகொரியா குற்றச்சாட்டு

அமெரிக்கா தேவையற்ற அணு ஆயுதப் போரை தங்கள் மீது பலவந்தமாக திணிப்பதாகவும், அமெரிக்காவுக்கும் வடகொரியாவுக்கும் அணு ஆயுத போர் மூண்டால் அதற்கு முழுக்க முழுக்க அமெரிக்காவே பொருப்பு ஏற்க வேண்டும் என்றும் வடகொரியா குற்றம் சாட்டியுள்ளது.

கடந்த சில நாட்களாகவே அமெரிக்கா, வடகொரியா இடையே கடும் போர்ப்பதற்றம் ஏற்பட்டுள்ளது. வடகொரியா உலக நாடுகளின் எதிர்ப்புகளை மீறு தொடர்ந்து ஏவுகணை பரிசோதனைகள் செய்து வருவதுடன் அமெரிக்காவுடன் போர் செய்யத் தயார் என்றும் சமீபத்தில் அறிவித்தது.

இந்நிலையில், அமெரிக்க தரப்பிலும் வடகொரியா மீதான போர் நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இதன் முதல்படியாக தென்கொரியா, வடகொரியா இடையிலான எல்லைப் பகுதியில் அமெரிக்க பாதுகாப்புப் படையினர் திடீர் சோதனை மேற்கொண்டனர். மேலும் விரைவில், வடகொரியாவுக்கு தகுந்த பாடம் கற்பிக்கப்படும் என்று, அமெரிக்க பாதுகாப்பு அதிகாரிகள் கூறியிருந்தனர்.

இந்த நிலையில், இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள வடகொரியா, தங்கள் மீது பலவந்தமாக அணு ஆயுதப் போரை அமெரிக்கா திணிப்பதாகவும் இருநாடுகளுக்கு இடையே போர் மூண்டால் அதற்கு அமெரிக்காவே முழு பொருப்பு என்றும் ஐ.நா., சபைக்கான வடகொரிய பிரதிநிதி கிம் இன் ரியாங் இதனை தெரிவித்துள்ளார்.

Leave a Reply