சாப்பாடு போடுங்கள்: கோவை வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

சாப்பாடு போடுங்கள்: கோவை வடமாநில தொழிலாளர்கள் திடீர் போராட்டம்

மேற்கு வங்கம் உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட வடமாநிலங்களில் இருந்து கோவைக்கு கட்டிட தொழில் உள்பட பல்வேறு வேலைக்காக நூற்றுக்கணக்கான இளைஞர்கள் வந்து பணிபுரிந்து வந்தனர்

இந்த நிலையில் கொரோனா வைரஸ் காரணமாக திடீரென நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பித்ததையடுத்து வட மாநிலங்களில் உள்ள இளைஞர்கள் அனைவருக்கும் வேலை இன்றி வருமானமின்றி சாப்பாடும் இன்றி தவித்தனர்

இதனை அடுத்து கோவையில் உள்ள ஒரு பகுதியில் 300க்கும் மேற்பட்ட வட மாநில இளைஞர்கள் ஒன்று கூடியதால் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து போலீசார் விசாரித்து, ‘ஊரடங்கு உத்தரவின்போது இவ்வளவு பேரும் ஒரே இடத்தில் இருக்கக்கூடாது கலைந்து செல்லுங்கள் என்று கூறினார்கள்

ஆனால் தங்களுக்கு சாப்பாடு ஏற்பாடு செய்ய வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை விடுத்து போராட்டத்தை நடத்தி இதையடுத்து போலீசார் லேசான தடியடி நடத்தி அவர்களை கலைத்தனர். அதன்பின் கோவை மாநகராட்சி மூலம் அவர்களுக்கு உணவு வழங்க போலீசார் ஏற்பாடு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply