shadow

யாராக இருந்தாலும் தலையை வெட்டுவேன் என்று கூறிய பாபாராம்தேவுக்கு பிடிவாரண்ட்

இந்தியர்கள் அனைவரும் பாரத மாதாஜி ஜே என்று கூற வேண்டும் என்றும் அவ்வாறு கூறாதவர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் தலையை வெட்டுவேன்’ என்றும் சர்ச்சைக்குரிய வகையில் பொதுமேடையில் பேசிய பாபாராம்தேவுக்கு ரோதக் நீதிமன்றம் ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டை பிறப்பித்துள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

பாஜக ஆட்சி அமைந்ததில் இருந்தே அக்கட்சியினர் சர்ச்சைக்குரிய கருத்துக்களை கூறி நாட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வரும் நிலையில் கடந்த 2016-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் பாஜக கூட்டம் ஒன்றில் பேசிய பாபாராம்தேவ், ‘நான் மட்டும் சட்டத்தை சார்ந்து இருக்காவிட்டால், பாரத் மாதா கீ ஜெ என்று கூறாதவர்களின் தலையை வெட்டுவேன் என்று கூறியிருந்தார். பாபா ராம்தேவின் இந்த கருத்து பெரும் சர்ச்சையானது.

இதுகுறித்து காங்கிரஸ் மூத்த தலைவர் சுபாஷ் பத்ரா என்பவர் ரோதக் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் ஜூன் 14ஆம் தேதி பாபாராம்தேவ் நீதிமன்றத்தில் கட்டாயம் ஆஜராக வேண்டும் என்று உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. இதன்படி நேற்று இந்த வழக்கு விசாரணை நடந்தபோது பாபாராம்தேவ் ஆஜராகவில்லை. இதனால் ராம்தேவுக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத வாரண்ட் உத்தரவை நீதிமன்றம் பிறப்பித்தது. மேலும், இந்த வழக்கு மீதான அடுத்தக்கட்ட விசாரணையை ஆகஸ்ட் மாதம் 3-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டது நீதிமன்றம்.

Leave a Reply