இன்றுடன் முடிவடைகிறது வேட்புமனு தாக்கல்: எத்தனை பேர் மனுதாக்கல் செய்துள்ளனர்?

tamilnadu election commsion

தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் பிப்ரவரி 19ஆம் தேதி நடைபெற உள்ள நிலையில் இன்று மாலையுடன் உள்ளாட்சி தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் நிறைவடைகிறது

இந்த நிலையில் இதுவரை 37,518 பேர் வேட்புமனு தாக்கல் செய்துள்ளதாக மாநில தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

இதனை அடுத்து வரும் 7ஆம் தேதி இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது

இன்று வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் வேட்பாளர்கள் அதிகளவில் வேட்புமனு தாக்கல் செய்யப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.