shadow

ரஷ்ய விமானம் சுட்டு வீழ்த்தப்பட்ட விவகாரம். 3ஆம் உலகப்போர் மூளுமா?
russia
சிரியாவிலிருந்து வந்து கொண்டிருந்த ரஷ்ய போர் விமானத்தை துருக்கி நாட்டைச் சேர்ந்த போர் விமானங்கள், துருக்கி-சிரியா எல்லைப்பகுதிக்கருகே, சமீபத்தில் காலை சுட்டு வீழ்த்திய விவகாரம் மூன்றாம் உலகப்போரை ஆரம்பித்து விடுமா? என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. துருக்கியின் இந்த செயலை அமெரிக்கா ஆதரித்துள்ளதால் உலக நாடுகள் இடையே பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ரஷ்ய போர் விமானத்திற்கு பலமுறை எச்சரிக்கை விடுத்ததாகவும், அதையும் மீறி துருக்கி வான்வெளிக்குள் நுழைய முயன்றதால் போர் விதிகளுக்குட்பட்டு அதனை சுட்டு வீழ்த்தியதாக துருக்கி அதிகாரிகள் தெரிவித்த நிலையில், விமானத்தில் இருந்து தப்பிய ஒரு விமானி, ‘துருக்கி எந்தவித எச்சரிக்கையையும் விடுக்கவில்லை’ என்று பேட்டியளித்துள்ளார்.

மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் “முதுகில் குத்திவிட்டார்கள்” கூறியதுடன் இது துருக்கி – ரஷ்ய இடையேயான உறவில் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தும் என்று தெரிவித்துள்ளதால் விரைவில் துருக்கி நாட்டிற்கு ரஷ்யா பதிலடி கொடுக்கலாம் என கூறப்படுகிறது.

இந்நிலையில் ரஷ்யாவின் வெளியுறவு அமைச்சர் செர்ஜி லாவ்ரோவ் நேற்று செய்தியாளர்களிடம் கூறியபோது, “போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது, ரஷ்யாவை ஆத்திரமூட்டுவதற்காக திட்டமிட்டு மேற்கொள்ளப்பட்ட செயலாக தெரிகிறது. இருப்பினும் துருக்கி மீது போர் தொடுக்கும் திட்டம் இல்லை’ என்று கூறியுள்ளார்.

ஆனால், துருக்கியுடனான எங்கள் உறவை மறு மதிப்பீடு செய்வது கட்டாயம். இது போன்ற குற்றங்களை எக்காரணம் கொண்டும் ஏற்றுக்கொள்ள முடியாது” என்றும் லாவ்ரோவ் தெரிவித்துள்ளார்.

English Summary: No, Turkey shooting down a Russian warplane will not spark World War III

Leave a Reply