பா.ஜ., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தெலுங்கு தேசம் முடிவு

பா.ஜ., அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம்: தெலுங்கு தேசம் முடிவு

மத்தியில் ஆளும் பாஜக அரசுக்கு எதிராக பாராளுமன்றத்தில் நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் கட்சி முடிவு செய்துள்ளது.

ஆந்திர மாநிலத்திற்கு சிறப்பு அந்தஸ்து வழங்கவில்லை என்று கூறி மத்திய பாரதிய ஜனதா கட்சியின் கூட்டணியிலிருந்து சமீபத்தில் சந்திரபாபு நாயுடுவின் தெலுங்குதேசம் வெளியேறியது. இதனை தொடர்ந்து, கடந்த முறை லோக்சபாவில் மத்திய அரசுக்கு எதிராக தெலுங்கு தேசம் மற்றும் ஓய்எஸ்ஆர் காங்கிரஸ் சார்பாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்தன. ஆனால், அமளி காரணமாக தீர்மானம் எடுத்து கொள்ளப்படவில்லை.

இந்த நிலையில், ஆந்திராவிற்கு சிறப்பு அந்தஸ்து வழங்காததை கண்டித்து, பார்லிமென்ட் மழைகால கூட்டத்தொடரில், பா.ஜ.க அரசுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வர தெலுங்கு தேசம் முடிவு செய்துள்ளது. இந்த தீர்மானத்திற்கு பெரும்பாலான எதிர்க்கட்சிகள் ஆதரவு கொடுக்க முன்வந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply