shadow

டாஸ்மாக் காட்சி இல்லாத முதல் ராஜேஷ் படம் ‘கிக்’

kikஇயக்குனர் எம்.ராஜேஷ் படம் என்றாலே டாஸ்மாக் காட்சி இருக்கும் என்பது அனைவரும் அறிந்ததே. அவருடைய பட டைட்டிலே விஎஸ்.ஓபி, கிக், என சரக்குகளின் பெயர்களில்தான் இருக்கும். எனவே அவரை சரக்கு இயக்குனர் என சமூக வலைத்தளங்களில் கூறி வந்தனர்.

இந்நிலையில் தொடர் தோல்வி காரணமாக தற்போது எம்.ராஜேஷ் டாஸ்மாக்கை கைவிட்டதாக தெரிகிறது. ஜி.வி.பிரகாஷ் நடிப்பில் அவர் இயக்கியுள்ள ‘கடவுள் இருக்கான் குமாரு’ படத்தில் ஒரு டாஸ்மாக் காட்சி கூட இல்லை என்று கூறியுள்ளார்.

பிரபல தயாரிப்பாளர் அம்மா கிரியேஷன்ஸ் சிவா தயாரித்துள்ள இந்த படம் ஒரு ஜாலியான ரோடு படம் என்றும் இதில் காதல், காமெடி, செண்டிமெண்ட் ஆகியவை ஒருங்கே கலந்த எண்டர்டெயின்மெண்ட் படம் என்றும் கூறப்படுகிறது. மேலும் இந்த படத்தின் படப்பிடிப்பு சென்னை ஈ.சி.ஆர் ரோடு, பாண்டிச்சேரி , கோவா போன்ற டிராபிக் இல்லாத பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது.

ஜி.வி.பிரகாஷ், நிக்கி கல்ராணி, ஆனந்தி, ஆர்ஜே பாலாஜி உள்பட பலர் நடித்து வரும் இந்த படத்தில் பிரகாஷ்ராஜ் முக்கிய கேரக்டர் ஒன்றில் நடித்துள்ளார். ஜி.வி.பிரகாஷ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகவுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *