எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை. மு.க.ஸ்டாலின்

எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை. மு.க.ஸ்டாலின்

போக்குவரத்து ஊழியர்கள் கடந்த ஒரு வாரமாக ஊதிய உயர்வு கேட்டு போராட்டம் நடத்தி வரும் நிலையில் எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு மசோதா இன்று சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டது.

இதன்படி இனிமேல் எம்.எல்.ஏக்களின் சம்பளம் ரூ.55 ஆயிரத்தில் இருந்து ஒரு லட்சத்து ஐந்தாயிரம் ரூபாயாக உயர்கிறது.

இந்த நிலையில் ஒருசில ஆயிரங்களுக்காக போக்குவரத்து தொழிலாளர்கள் போராடி வரும் நிலையில் எம்.எல்.ஏக்களுக்கு ஊதிய உயர்வு தேவையில்லை என்றும் முதலில் போக்குவரத்து ஊழியர்களின் தேவைகளை பூர்த்தி செய்யுங்கள் என்றும் எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஆனாலும் விதி 110ன் கீழ் எம்.எல்.ஏக்களின் ஊதிய உயர்வு மசோதாவை முதல்வர் நிறைவேற்றினார்.

Leave a Reply