shadow

ரூ.1000 நோட்டு அச்சடிக்கப்படுவது உண்மையா? சக்திகாந்த தாஸ் விளக்கம்

கடந்த நவம்பர் மாதம் ரூ.500 மற்றும் ரூ.1000 நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு அறிவித்த பின்னர் புதிய ரூ.500 மற்றும் ரூ.2000 நோட்டுக்களை அறிமுகம் செய்தது. தற்போது நாடு முழுவதும் ஓரளவுக்கு பணத்தட்டுப்பாடு பிரச்சனை முடிந்துவிட்ட நிலையில் விரைவில் ரூ.1000 நோட்டுக்கள் வெளியாகவுள்ளதாகவும், இதற்கான அச்சடிக்கும் பணி தொடங்கிவிட்டதாகவும் செய்திகள் வந்தது.

ஆனால் இந்த செய்தியை பொருளாதார விவகாரத்துறை செயலாளர் சக்திகாந்த தாஸ் மறுத்துள்ளார். புதிய 1,000 ரூபாய் நோட்டுகள் அச்சடிக்கும் திட்டம் இல்லை என்று அவர் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.

இதுகுறித்த்து அவர் மேலும் கூறியதாவது: ரூ.500 மற்றும் அதற்கும் குறைந்த மதிப்புள்ள பணத்தாள்களை அச்சடிக்கும் பணியிலேயே முழு கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் ஏடிஎம் மையங்கள் தொடர்பான பிரச்னைகளுக்கு தீர்வுகாணப்பட்டு வருவதாகவும் சக்திகாந்ததாஸ் கூறினார். மேலும் தேவையான பணத்தை மட்டுமே ஏடிஎம் மையங்களிலிருந்து மக்கள் எடுக்க வேண்டும் என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

Leave a Reply