மரண தண்டனையில் இருந்து ஆயுள் தண்டனையாக மாற்றப்பட்ட முருகன், சாந்தன், பேரறிவாளன் ஆகிய மூன்று பேர்களை விடுவிப்பதில் மட்டுமே நீதிமன்ற நடைமுறைகள் பின்பற்றப்படவில்லை என உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மத்திய அரசின் மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே அவர்கள் மூவரை தவிர தமிழக அரசு விடுவிப்பதாக அறிவித்துள்ள மீதி நான்கு பேர்களின் விடுதலையில் எவ்வித சிக்கலும் இல்லை என்றும், எனவே நளினி உள்பட அந்த நான்கு பேர்களும் விரைவில் விடுதலை செய்யப்படுவார்கள் என தான் நம்புவதாகவும், நளினியின் வழக்கறிஞர் புகழேந்தி செய்தியாளர்களிடம் கூறினார்.

இன்று வேலூர் மத்திய சிறைச்சாலியில் நளினியை சந்தித்துவிட்டு வெளியே வந்த வழக்கறிஞர் புகழேந்தி, தமிழக அரசு நளினி உள்பட நான்கு பேர்களையும் விடுவிக்க தேவையான நடவடிக்கையை எடுத்து வரும் என தான் நம்புவதாக கூறியுள்ளார். முருகன் உள்பட மூன்று பேர்களை விடுதலை செய்ய உச்சநீதிமன்றம் இடைக்கால தடைதான் விதித்துள்ளது என்றும், அந்த தடை விரைவில் விலகும் என்றும் அவர் கூறினார்.

Leave a Reply