10,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வுகள் எப்போது? அமைச்சர் தகவல்

இந்த ஆண்டு 10ஆம் வகுப்பு மற்றும் 12ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் தள்ளி போகாது என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் அவர்கள் பதிலளித்துள்ளார்.

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக பொதுத்தேர்வுகள் நடைபெற வில்லை என்ற நிலையில் இந்த ஆண்டு பொதுத்தேர்வுகள் மார்ச் அல்லது ஏப்ரல் மாதம் நடைபெறும் என்றும் பொது தேர்வுகள் தள்ளி போக வாய்ப்பே இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஆண்டு பாடத்திட்டம் குறைக்கப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது.