அமைச்சர் செங்கோட்டையன்

பத்தாம் வகுப்பு தேர்வை இதற்கு மேல் ஒத்தி வைக்க வாய்ப்பு இல்லை என பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

கடந்த மார்ச் மாதம் 27ம் தேதி பத்தாம் வகுப்பு தேர்வு திட்டமிடப்பட்டிருந்த நிலையில் திடீரென மார்ச் 24ஆம் தேதி ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதால் தேர்வு ஒத்திவைக்கப்பட்டது

அதன்பின் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பத்தாம் வகுப்பு தேர்வு ஜூன் 1ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டது ஆனால் இந்த அறிவிப்புக்கு எதிர்க் கட்சிகள் உள்பட பலர் எதிர்ப்பு தெரிவித்ததன் காரணமாக ஜூன் 15ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது

இதனை அடுத்து ஜூன் 15ஆம் தேதியும் தேர்வு நடத்த வேண்டாம் என்ற கோரிக்கை எழுந்து வருகிறது. இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் சமீபத்தில் அளித்த பேட்டியில் 15ஆம் தேதி திட்டமிட்டபடி தேர்வூகள் நடக்கும் என்றும் இதற்கு மேல் தேர்வுகள் ஒத்தி வைக்க வாய்ப்பு இல்லை என்றும் உறுதிபடக் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply