மழையால் பாடத்திட்டம் குறைக்கப்படுமா? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்

கனமழை காரணமாக நவம்பர் மாதம் முழுவதும் ஒருசில நாட்கள் பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த ஆண்டு பாடத்திட்டங்கள் குறைக்கப்படுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

இந்த நிலையில் மழையால் பள்ளிக்கு விடுமுறை அளிக்கப்பட்டிருந்தாலும் பாடத்திட்டத்தை குறைக்க வேண்டிய அவசியம் இல்லை என்று அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

மேலும் பள்ளிகள் திறக்கப்பட்ட பின் கூடுதல் வகுப்புகள் வைத்து பாடங்களை நடத்தி முடிக்கப்படும் என்றும் அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.