சென்னை ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் வாங்க முடியாது: ஏன் தெரியுமா?

கொரோனா பரவல் காரணமாக ரயில் நிலையங்களில் கூடும் கூட்டத்தை தவிர்க்க சென்னையில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இனி பிளாட்பாரம் டிக்கெட் கிடையாது என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால் அதே நேரத்தில் மூத்த குடிமக்களுக்கும், மாற்று திறனாளிகளுடனும் உடன் வருபவர்களுக்கு மட்டும் ஒரே ஒரு பிளாட்பாரம் டிக்கெட் வழங்கப்படும் என்றும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது

இந்த கட்டுப்பாடு சென்னை சென்ட்ரல், எழும்பூர், அரக்கோணம், காட்பாடி, தாம்பரம், செங்கல்பட்டு ஆகிய ரயில் நிலையங்களில் அமல்படுத்தப்படுகிறது.

Leave a Reply