shadow

நாடு முழுவதும் மதுவிலக்கு உண்டா? மத்திய அமைச்சர் பதில்

alcoholதமிழகம் உள்பட நாடு முழுவதிலும் உள்ள மதுக்கடைகளை மூட வேண்டும் என்று பல்வேறு சமூக ஆர்வல இயக்கங்களும் அரசியல் கட்சிகளும் வலியுறுத்தி வருகின்றனர். சமீபத்தில் பீகார் மாநிலத்தில் பூரண மதுவிலக்கு அமல்படுத்தி ஒரு நல்ல தொடக்கத்தை கொடுத்துள்ளது. பீகார் மாநிலத்தை போலவே நாடு முழுவதும் மதுவிலக்கு அமல்படுத்த வேண்டும் என மத்திய அரசை வலிறுத்தி வரும் நிலையில் நாடுமுழுவதும் மதுவிலக்கு கொண்டு வரும் திட்டம் எதுவும் இல்லை என்று மத்திய உள்துறை இணை யமைச்சர் ஹன்ஸ்ராஜ் கங்காராம் ஆஹிர் நேற்று மக்களவையில் கேள்வி நேரத்தின் போது பதிலளித்துள்ளார்.

ஐக்கிய ஜனதா தளம் உறுப்பினர் கவுசலேந்திர குமார் மக்களவையில் நேற்று கேள்வி நேரத்தின்போது, “பீகா மாநில அரசு மதுவிலக்கை அமல்படுத்தியுள்ளது போல இந்தியா முழுவதும் மதுவிலக்கைக் கொண்டு வரும் எண்ணம் மத்திய அரசுக்கு உள்ளதா? எனக் கேள்வியெழுப்பினார்.

இதற்கு பதிலளித்த உள்துறை இணையமைச்சர் ஹன்ஸ் ராஜ் கங்காராம் ஆஹிர், “நாடு தழுவிய மதுவிலக்கைக் கொண்டு வரும் திட்டம் அரசுக்கு இல்லை. இது மாநில அரசு விவகாரம். எனவே, தேவையைப் பொறுத்து மதுவிலக்கைக் கொண்டு வருவது அந்தந்த மாநில அரசுகளின் பொறுப்பு. உதாரணமாக குஜராத்தில் ஏற்கெனவே மதுவிலக்கு அமலில் உள்ளது. பல்வேறு மாநில அரசுகள் மதுவிலக்கை அமல் படுத்த முடிவு செய்தால், மத்திய அரசு அவைகளுக்கு நிச்சயம் உதவும் என்று உறுதியளித்தார்.

பிஜு ஜனதா தளம் உறுப்பினர் நாகேந்திர குமார் பிரதான் பேசும் போது, “நாடுதழுவிய மதுவிலக்கு நிச்சயம் தேவை. சுதந்திரம் பெறுவதற்கு முன்பு மகாத்மா காந்தி ஒரு முறை பேசும்போது தேச விடுதலையை விட மதுவிலக்குக்கே முதல் முன்னுரிமை என தெரிவித்துள்ளார். மதுவிலக்குக்கு ஆதரவாக தேசப்பிதாவே கருத்து தெரிவித்திருப்பதால் மதுவிலக்கு கொண்டு வரப்பட வேண்டும்’ என்று கூறினார்.

Leave a Reply