தீபாவளி பொங்கல் நேரத்தில் ஆம்னி பஸ்களில் கூட்டம் பெரிதாக இருக்கும் என்பது தெரிந்ததே ஆனால் இந்த தீபாவளிக்கு ஆம்னிபஸ் பக்கம் பயணிகள் யாரும் செல்லாதது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

டிக்கெட் கட்டணம் அதிகம் மற்றும் ஏராளமான சிறப்பு பேருந்துகள் இருப்பதால் ஆம்னி பஸ்களில் கூட்டமே இல்லாமல் இருந்ததை பார்க்க முடிந்தது

அதுமட்டுமின்றி பெரும்பாலான சென்னைவாசிகள் இந்த ஆண்டு தீபாவளிக்கு சொந்த ஊருக்கு செல்லவில்லை

கொரோனா ஊரடங்கு நேரத்தில் 6 மாதங்கள் வீட்டில் இருந்துவிட்டு ஒரு மாதத்திற்கு முன்புதான் சென்னைக்கு பலர் வந்திருப்பதால் மீண்டும் சொந்த ஊருக்குத் தீபாவளிக்கு பயணம் செய்ய விருப்ப படவில்லை என்று கூறப்படுகிறது

டிக்கெட் கட்டணத்தை குறைத்தும், ஒரு சில கூடுதல் வசதிகளை செய்து கொடுத்தும் கூட ஆம்னி பேருந்துகளுக்கு பயணிகள் வராமல் இருந்தது பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply