shadow

9நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் எந்த கட்சிக்கும் எதிர்க்கட்சியாக இருக்க தகுதி பெறவில்லை என்பதால் எதிர்க்கட்சியின்றி பாராளுமன்றம் செயல்படும் என டெல்லியில் இருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.

மக்களவையில் எதிர்க்கட்சியாக தகுதி பெற மொத்த தொகுதிகளில் பத்து சதவிகித தொகுதிகளில் வெற்றி பெற்றிருக்க வேண்டும். அதாவது 55 தொகுதிகளிலாவது குறைந்தபட்சம் வெற்றி பெற்றிருக்க வேண்டும். ஆனால் பாரதிய ஜனதாவுக்கு அடுத்தபடியாக காங்கிரஸ் கட்சி 44 இடங்களையும், அதிமுக 37 இடங்களையும் பிடித்துள்ளதால் எந்த கட்சியும் எதிர்க்கட்சி அந்தஸ்து பெறும் தகுதியில் இல்லை.

1984ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சி 404 தொகுதிகளில் வெற்றி பெற்ற போது, இதே போன்று ஒரு நிலைமை ஏற்பட்டது. அபோது இடது சாரிகள் மொத்தம் 22 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றிருந்தது. எனவே அந்த காலக்கட்டத்தில் மக்களவை எதிர்க்கட்சியே இன்றி செயல்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தற்போதைய மக்களவையும் எதிர்க்கட்சியின்றி செயல்படும் என தெரிகிறது.

இருப்பினும் எதிர்க்கட்சி அந்தஸ்தை ஏதாவது கட்சிக்கு வழங்கும் முடிவை எடுக்கக்கூடிய அதிகாரம் சபாநாயகர் சுமித்ரா மகாஜனுக்கு இருப்பதால், அவர் இதுகுறித்து பிரதமர் மற்றும் குடியரசு தலைவரிடம் ஆலோசனை நடத்துவார் என கூறப்படுகிறது.

Leave a Reply