சிம்பு, ஹன்சிகா மோத்வானி காதலை போலவே ஜெய், நஸ்ரியா காதலும் கோடம்பாக்கத்தில் பரபரப்பாக ஓடிக் கொண்டிருந்தது. கடந்த சில தினங்களுக்கு முன்பு நஸ்ரியா அளித்த பேட்டியில் “ஜெய் ஜஸ்ட் பிரண்டுதான். நாங்க போன்ல கூட பேசிக்கொள்வதில்லை. எங்காவது பார்த்துக் கொண்டால் ஒரு ஹாய் சொல்லிக்குவோம் எங்களுக்குள் காதலும் இல்லை, கத்திரிக்காயும் இல்லை” என்று சொல்லிவிட்டார்.

இப்போது ஜெய் அதையே வழிமொழிந்திருக்கிறார்.  “நானும் நஸ்ரியாவும் காதலிக்கலேன்னு பலமுறை சொல்லிட்டேன்  அப்படி இருந்தும் இதைப் பற்றியே பேசுறாங்க. கூட  நடிக்கிற நடிகைளுடன் காதல்னு வதந்தி பரப்புறதே சிலருக்கு வேலயாப்போச்சு. இதனால எனக்கு பெரிய பாதிப்பு எதுவும் இல்லை. பாவம் நஸ்ரியா அவுங்கதான் நிறைய பாதிக்கப்படுறாங்க. இத புரிஞ்சுக்குங்க ப்ளீஸ்” என்று புலம்பியிருக்கிறார் ஜெய்.

Leave a Reply