மதுவிலக்கு கிடையாது. குறைவாக குடியுங்கள். உ.பி. முதல்வர் அகிலேஷ்

மதுவிலக்கு கிடையாது. குறைவாக குடியுங்கள். உ.பி. முதல்வர் அகிலேஷ்

akileshபீகார் மாநிலத்தில் சமீபத்தில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டது. அதைபோல தமிழகத்திலும் படிப்படியாக மதுவிலக்கு அமல்படுத்தப்படும் என்றும் அதன் முதல்கட்டமாக 500 டாஸ்மாக் கடைகள் மூடப்படும் என்றும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டார்.

இந்நிலையில் உத்தரபிரதேச முதலமைச்சர் அகிலேஷ் யாதவ் மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்றும் குறைவாக மது அருந்தி உடல்நிலையை பாதுகாத்து கொள்ளுங்கள் என்று மட்டுமே இப்போதைக்கு அறிவுரை கூற முடியும் என்றும் கூறியுள்ளார்.

இன்று காலை செய்தியாளர்களை சந்தித்த அகிலேஷ் யாதவ் மதுவிலக்கு குறித்த கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையில், “உத்தரபிரதேசத்தில் முழு மதுவிலக்கு முடிவை உடனடியாக கொண்டு வருவது சாத்தியமல்ல, குறைவாக மது அருந்துங்கள் என்றே இப்போதைக்கு அறிவுரை வழங்க முடியும்.

கரும்பு விவசாயிகளின் நலன், மதுக்கடைகளில் பணியாற்றும் லட்சக்கணக்கானோரின் வேலைவாய்ப்பு ஆகியவற்றுடன் தொடர்புடையதாகும் இது. எனவே எடுத்தோம், கவிழ்த்தோம் என்று முடிவெடுக்க முடியாது” என்று தெரிவித்தார்.

Leave a Reply