இந்தியன் 2வும் கிடையாது, 3யும் கிடையாது:

படமே டிராப்?

கமல்ஹாசன் நடிப்பில் ஷங்கர் இயக்கத்தில் உருவாக்கிய இந்தியன் 2’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு ஒரு சில மாதங்கள் நடந்த நிலையில் திடீரென படப்பிடிப்பு நிறுத்தப்பட்டது

இந்த படத்தின் படப்பிடிப்பின் இடையே நடந்த விபத்து, ஊரடங்கு உள்பட பல்வேறு காரணங்கள் படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதற்கு காரணமாக இருந்தாலும் லைக்கா நிறுவனத்திற்கும் கமலஹாசனுக்கும் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இந்த படத்தின் படப்பிடிப்பு தொடர்ந்து நடக்குமா என்ற கேள்விக்குறி உள்ளது

இந்த நிலையில் இந்தியன் 2’ படப்பிடிப்பு இதுவரை எடுத்த காட்சிகள் ஆறு மணி நேரத்துக்கு இருப்பதாகவும் எனவே இந்தியன் 2 படத்தோடு இந்தியன் 3 படமும் வரும் என்றும் கூறப்படுகிறது
ஆனால் கோலிவுட்டை சேர்ந்த பிரபலம் ஒருவர் கூறும்போது இந்தியன் 2வும் வராது, இந்தியன் 3யும் வராது அந்த படமே கிட்டத்தட்ட டிராப் என்று கூறியுள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

Leave a Reply

Your email address will not be published.