shadow

ajith-vijay-shankarகடந்த சில நாட்களாக ஷங்கரின் அடுத்த படம் குறித்து ஊடகங்களில் பலவிதமான கருத்துக்கள் வெளிவந்து கொண்டு இருக்கின்றது. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த எந்திரன் படத்தின் இரண்டாம் பாகத்தை அவர் இயக்கவுள்ளதாக கூறப்பட்டது. ஆனால் ரஜினியின் உடல்நிலை அந்த படத்திற்கு ஒத்து வராது என்பதால் ஷங்கர் அதே கதையை அஜீத் அல்லது விஜய் ஆகிய இருவரில் யாராவது ஒருவரை வைத்து எடுக்கலாம் என்று செய்தியும் வெளிவந்தது.

இதனிடையே சமூக வலைத்தளமான டுவிட்டரில் ஷங்கரின் அடுத்த படம் எது? என்று ரசிகர் ஒருவர் கேட்ட கேள்விக்கு பதிலளித்த ஷங்கர், “தற்போது தன்னுடைய கவனம் முழுவதும் விக்ரம் நடித்த ‘ஐ’ படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணியில் இருப்பதாகவும், அடுத்த படம் குறித்து தான் எதையும் இதுவரை முடிவு செய்யவில்லை என்றும் கூறினார். “ஐ” படம் ரிலீஸான பின்னர்தான் அடுத்த படம் குறித்த அறிவிப்பை வெளியிடயுள்ளதாக கூறினார்.

மேலும் இன்னொரு கேள்விக்கு பதிலளித்த ஷங்கர், ‘அஜித், விஜய் ஆகிய இருவரையும் இணைத்தோ அல்லது தனித்தனியாகவோ இயக்கும் எண்ணம் எதுவும் இல்லை. என்றும், என்னுடைய திரைக்கதை அஜீத், விஜய் ஆகிய இருவருக்கும் செட் ஆகாது என்றும் கூறியுள்ளார். மேலும் நண்பன் படம் 3 இடியட்ஸ் படத்தின் ரீமேக் என்பதால்தான் விஜய்யை வைத்து இயக்கியதாகவும், இனியொருமுறை விஜய் படத்தை இயக்கும் எண்ணம் இல்லை என்றும் கூறியுள்ளார்.

Leave a Reply