திருப்பதியில் இனி தனியார் ஹோட்டல் கிடையாது: அன்னதானம் மட்டுமே!

திருப்பதியில் உள்ள அனைத்து தனியார் ஓட்டல்களையும் மூட திருப்பதி திருமலை தேவஸ்தானம் உத்தரவிட்டுள்ளதாகவும் இனி தேவஸ்தானம் அளிக்கும் அன்னதானம் மட்டுமே கிடைக்கும் என்றும் தேவஸ்தானம் உத்தரவு பிறப்பித்துள்ளது

திருமலை திருப்பதியில் பல ஹோட்டல்கள் இயங்கி வரும் நிலையில் தற்போது அனைத்து ஹோட்டல்களையும் மூட வேண்டும் எனவும், திருமலையில் இனி எந்த ஒரு தனியார் உணவு விற்பனையை எதற்கும் அனுமதி இல்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருப்பதி தேவஸ்தானம் சார்பில் காலை முதல் இரவு வரை இலவச உணவு வழங்கப்பட்டு வருகிறது